உடல் மண்ணுக்கு, உயிர் தன் தாய்நாட்டிற்கு என்று அளித்த , வீரர்கள் வாழ்ந்த நாடு நம் நாடு. போர்க்களத்தில் இறக்கும் வீரரின் உடலைப் "புகழுடம்பு" என்றும் , அவர்கள் முகத்திலும் நெஞ்சிலும் ஏற்பட்ட காயங்களை "விழுப்புண்" என்றும் குறிப்பிட்டனர். நாட்டிற்காக உயிர் துறந்து வரலாற்றில் அழியாப் புகழ் எய்தியதால், அவர் புகழுடம்பு எய்தினார் என்றும் வீரமரணம் எய்தினார் என்றும் குறிப்பிட்டனர்.
"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே - வாய்ச்சொல்லில் வீரரடீ"
என்று பாரதியார் பாடியது போல், வீரத்திற்குக் களங்கம் விளைக்கும் கோழைகளும் இருந்தனர். இவர்கள் போர்க்களத்தில், எதிர் வருவோரை எதிர்கொள்ள இயலாமல், முதுகைக்காட்டி ஓடினர்.
இது "புறமுதுகு" என்றும், முதுகில் ஏற்பட்ட புண் , "புறப்புண்" என்றும் குறிக்கப்பட்டது. இது மிகவும் வெட்கித் தலைகுனியும் , ஓர் அடையாளம்.

தமிழ்நாட்டில் ஒருமுறை சோழ மன்னன் கரிகாலன், சேர மன்னன் பெருஞ்சேரலாதன் இருவரும் , வெண்ணிப் பறந்தலை (தற்போது கோவில்வெண்ணி) என்ற இடத்தில் போரிட்டனர். இவ்விடம் , தஞ்சை மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ளது.வெள்ளை நிறமான நந்தியாவட்டைப் பூக்கள் ( வெண்ணி) , நிறைந்த இடம் என்பதால் இப்பெயர் என அறிகிறோம் .
போரில் , கரிகாலன் வெற்றி பெற்றான். கரிகாலன் எறிந்த வேல் , சேரனின் நெஞ்சைக் கிழித்து, முதுகையும் புண்ணாக்கியது. சேரன் உயிர் பிரியவில்லை. அவன் மிகவும் மனம் நொந்தான் . இவ்வுடல் இன்னும் இங்கு இருக்கத்தான் வேண்டுமா ? மாவீரனாய் களத்தில் போரிட்டுத் தோற்ற போதிலும் , முதுகில் ஒரு புண் ஏற்பட்டுவிட்டதே. என் உயிர் அதற்கு முன்னமே பிரிந்திருக்கக் கூடாதா? ஆனால், அதிலும் ஒரு காரணம் இருந்தது போலும் . அதன் பொருட்டே, அவன் அழியாப்புகழ் பெற்றான். அது என்ன காரணம்?
சேரன் ஓர் வீரனை அழைத்து தர்ப்பைப்புல் கொணரச் செய்தான். போரில் தன் உயிர் பிரியாததால் களத்திலேயே தர்ப்பைப்புல்லால் ஓர் ஆசனம் அமைத்து, அதில் வடக்கு நோக்கி நோன்பிருந்து உயிர் விட்டான் . அவனைப் பின்பற்றி இன்னும் சில வீரர்களும் அவ்வாறே செய்தனர்.

இவனின் உயர்ந்த செயலைக் கண்ட வெண்ணிக்குயததியார் ( பெண்புலவர்) , போரில் வென்ற கரிகாலனை விட , புறப்புண் நாணி வடக்கு நோக்கி நோன்பிருந்து உயிர் விட்ட சேரன் அல்லவா மிக நல்லவன் என்று எண்ணி, கரிகாலனைப் பார்த்துப் பின்வரும் பாடலைப் பாடினார்.
பாடல் இடம்பெற்ற நூல் - புறநானூறு
பாடல் எண் - 66
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக் கிருந்தோனே.
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக் கிருந்தோனே.
அருஞ்சொற்பொருள்
நளியிரு முந்நீர் - நிறைந்த நீரைக் கொண்ட பெரிய கடல்
முந்நீர் - கடல் ( முந்நீர் = மூன்று + நீர் , ஆற்றுநீர் ஊற்று நீர், மழை நீர் 3ம் சேறும் இடம் கடல்)
நாவாய் - கப்பல் ,மரக்கலம்
உரம் - வலிமை , உரவோன் - வலிமையுடையவன்
களி - மகிழ்ச்சி, இயல் - இயல்பு, களி இயல் யானை கரிகால் வளவ ! - மகிழ்ச்சியான இயல்போடும் செருக்கோடும் உள்ள யானை மேல் வரும் கரிகாலவளவனே
அமர் - போர்க்களம்
நின்னினும் நல்லன் அன்றே - உன்னைவிட நல்லவன் அல்லவா
யாணர் - புதுமை, கலி - மிகுதி / கடல்
கலிகொள்யாணர் வெண்ணிப் பறந்தலை - மிக அதிகமாகப் புது வருவாய் உள்ள வெண்ணிப்பறந்தலை ஊர்
கரிகாலன் - கரிகால பெருவளத்தான், கரிகால வளவன் - வேறு பெயர்கள்
மருக! வளவ!வென்றோய் என்ற சொற்கள் மன்னனை நோக்கிய விளிச் சொற்கள் . (addressing the king)

விளக்கம்
கடலில் காற்றின் இயல்பை அறிந்து அதற்கேற்ப , கப்பலைச் செலுத்தும் வலிமையான தொழில்புரிவோரின் வழி தோன்றிய மன்னனே (மருக! மருமகன் என்ற பொருளும் உண்டு) கரிகாலனே. நீ உன் ஆற்றல் வெளிப்படுமாறு போர்க்களத்தில் வென்றாய் . ஆனால் , உன்னிடம் தோற்ற பெருஞ்சேரலாதன் புறப்புண்ணுக்காக நாணிக் களத்திலேயே நோன்பிருந்து உயிர் துறந்தான். அவன் உன்னை விட நல்லவன் அல்லவா ? .
அரிய/அறிய வேண்டிய தகவல்
காற்றின் இயல்பை அறிந்து அதன்படி, கப்பல் செலுத்தியவர்கள் தமிழர்கள் என்ற அறிவியல் உண்மை புலனாகிறது.
புறநானூற்றில் இது போன்ற மிக அழகான பாடல்கள் நிறைய உள்ளன. அது, தமிழரின் வீரம், புகழ், கொடைத்திறம், போன்றவற்றைப் பறைசாற்றும் ஒப்பற்ற பாடல்களின் தொகுப்பாகும் .
Ref :
Velli maalai, ungal katturai....
ReplyDeleteArumaiyaana inaippu idhu :-)
Regards,
Malarkodi
Vaazhga ungal muyarchi.
ReplyDeleteVaazhga namm Tamizh.
Ezhil
Really very good article. Well done!
ReplyDeleteWishes,
Bhavani
Arupudham!
ReplyDeleteAfter Nalavenba series, this one too shines !!
ReplyDeleteLooking for more in the series.
D. Nithila
Good one, Iswarya.
ReplyDeleteBut where's your promised audio helper files? Wouldhave been easier for Tamil starters like me :-(
Stella Mary
Philosophical and fecund. Your blog spins off several ideas, emotions & messages at once!
ReplyDeleteIt wont be flattering to say this blog is like a mix vegetable rice, providing all flavours proportionately.
Keep up the good work & spread the Tamil awareness.
I am too lazy to comment on any blogs though I follow a handful of them.
Yours made to comment for only one reason - Your passion thats quite visible from your first post - "என் அன்னைத்தமிழுக்காக"
- Hemalatha Parameshwaran
Well said, Hemalatha. A good blog like this deserves an apt appreciation like yours.
ReplyDeleteWishes,
R. Bhavani